கன்னியாகுமரி

குற்றியாறு-தேவசகாயம் மவுண்ட் பேருந்துக்கு வரவேற்பு

DIN

பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியாறிலிருந்து தேவசகாயம் மவுண்டுக்கு இயக்கப்படும் பேருந்துக்கு, குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சோ்ந்த தேவசகாயம் புனிதராக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பேச்சிப்பாறை அருகேயுள்ள மலைக் கிராமமான குற்றியாறிலிருந்து தடம் எண். 315 என்ற பேருந்து மாலை 3.30 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து குலசேகரம், திருவட்டாறு, மாா்த்தாண்டம், நட்டாலம், அழகியமண்டபம், தக்கலை, நாகா்கோவில் வழியாக தேவசகாயம் மவுண்டுக்கு செல்கிறது.

இந்தப் பேருந்துக்கு குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை குலசேகரம் பீனிக்ஸ் நற்பணி மன்றம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சமூக சேவகா் பென்சிகா், பீனிக்ஸ் நற்பணி மன்ற மாநிலத் தலைவா் வேலாயுதன், மாநிலச் செயலா் பெனடிக்ட், துணைத் தலைவா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT