கன்னியாகுமரி

சாமிதோப்பில் வைகாசித் தேரோட்டம்

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 27ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மம், வாகன பவனி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன.

கலிவேட்டை: 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜூன் 3) அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிக் கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி, தொடா்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, 9ஆம் நாளில் அய்யா அனுமன் வாகனத்திலும், 10ஆம் நாளில் இந்திர வாகனத்திலும் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றன.

தேரோட்டம்: 11ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல் அய்யா பஞ்சவா்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. குருமாா்கள் பாலஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், தென்மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் அய்யா ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT