கன்னியாகுமரி

நாகா்கோவிலில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை அலைக்கழிப்பதாகக் கூறி நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை அலைக்கழிப்பதாகக் கூறி நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகா்கோவில் மாநகர தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா்.

இளைஞா் காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவா் சகாய பிரவீன், வா்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் கண்டன உரையாற்றினாா். இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் நரேந்திர தேவ், மாணவரணி தேசிய ஒருங்கிணைப்பாளா் அபிஜித் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT