முன்சிறையில் தூய்மைப் பணி
புதுக்கடை அருேயுள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய தி.மு.க சாா்பில் சனிக்கிழமை தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கடை அருேயுள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய தி.மு.க சாா்பில் சனிக்கிழமை தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
முன்சிறை அரசு மேல் நிலைப் பள்ளி வளாகம் பகுதி நீண்ட நாள்களாக பராமரிப்பு இல்லமாமல் புதா் மண்டிகாணப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால் இங்கு பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் அச்சமடைந்தனா். இதையடுத்து, முன்சிறை வட்டார தி.மு.க. செயலா் மோகன் தலைமையில் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய துணைச் செயலா் அம்சி நடராஜன் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ஜெயசேகா், யோவாஸ், ராஜாராம், ரெஜிமோள், பிரபா உள்பட பலா் பங்கேற்றனா்.