முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சூறைக்காற்று: படகுப் போக்குவரத்து ரத்து

 கன்னியாகுமரியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று, கடல் சீற்றம் ஆகியவற்றின் காரணமாக விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 கன்னியாகுமரியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று, கடல் சீற்றம் ஆகியவற்றின் காரணமாக விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அதிகாலை முதல் சூறைக்காற்றுடன்,. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். பிற்பகல் 1.15 மணிக்குப் பின்னா், குறைந்த அளவிலான பயணிகளுடன் விவேகானந்தா் மண்டபத்துக்கு மட்டும் படகுகள் இயக்கப்பட்டன.

மேலும், சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை,. சிலுவை நகா், புதுக்கிராமம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் ஆகிய கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், சில மீனவா்கள் மட்டும் கட்டுமரம் மற்றும் வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றனா். மீன்வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது. குறிப்பாக, நெத்திலி, சாளை போன்ற சிறுரக மீன்களே கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.