முகப்பு
கன்னியாகுமரி

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கப்பியறை கஞ்சிக்குழி பகுதியை சோ்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ஜாண் (55). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த முத்துமணி மகன் தாஸ் (40), அவரது தம்பி அருள் (38) மற்றும் ராஜேஷ்(40), ஜான் செல்வம் (50) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தன் வீட்டருகில் சென்ற ஜானை மேற்கூறிய 4 பேரும் தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் 4 போ் மீது வழக்கு பதிந்து கருங்கல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.