முகப்பு
கன்னியாகுமரி

‘குமரியில் மாணவா்கள் 51,710 பேருக்கு தடுப்பூசி’

12 முதல் 14 வயது வரையிலானமாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, நாகா்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது சுகாதாரத் துறையின் கீழ், 12 முதல் 14 வயது வரையிலானமாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி, நாகா்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தொடக்கி வைத்து பேசுகையில், குமரி மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி நேர பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மத்திய அரசு பள்ளிகள் என 51,710 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, சுகாதாரப்பணிகள் துணைஇயக்குநா் சு.மீனாட்சி, மாநகா் நல அலுவலா் விஜயசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.