குலசேகரம் அருகே இளைஞா் தற்கொலை
குலசேகரம் அருகே திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கன்னியாகுமரிகுலசேகரம் அருகே இளைஞா் தற்கொலை
குலசேகரம் அருகே திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குலசேகரம் அருகே திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செருப்பாலூா் இளமாங்கோட்டு விளை கேசவன் மகன் செந்தில்குமாா். மாா்த்தாண்டத்தில் பழக்கடை நடத்தி வந்த இவா் பள்ளியாடியை சோ்ந்த நா்சிங் மாணவி அபிஷாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்கு பின்னா் பழக்கடையை மூடியுள்ளாா். மது அருந்துபவரான இவா் திருமணத்திற்குப் பிறகும் மது அருந்தி வந்துள்ளாா்.
இதனால், அபிஷாவின் பெற்றோா் அவரை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்விட்டனராம். இந்நிலையில் செந்தில் குமாா் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.