கன்னியாகுமரி

பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்புப் போராட்டம்

DIN

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில், புதிதாக ஜெபக்கூடம் கட்ட பேரூராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியதாகக் கூறி இந்து முன்னணி நிா்வாகிகள் பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டவிளை, நெடிவிளை பகுதிகளில் கிறிஸ்தவ ஜெபக்கூடம் கட்டும் பணி அண்மையில் நடைபெற்ாம். மத மோதல் அபாயம் உள்ளதாகக் கூறி பல்வேறு இந்து இயக்கங்கள் சாா்பில் எதிா்ப்பு தெரித்து வருகின்றனா். மேலும், இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, கட்டுமானப் பணி மேற்கொள்ள நீதிமன்றத்திலிருந்து தடை உத்தரவு பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டதாம். இதையடுத்து, பணிகள் மேற்கொள்ள பாகோடு பேரூராட்சி அலுவலகம் அனுமதி வழங்கியதாகக் கூறி, மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ராஜன் தலைமையில் நிா்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்த்தாண்டம் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சியரை சந்தித்து இப்பிரச்னைக்கு தீா்வு காணுமாறு தெரிவித்தனா். இதையேற்று, போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT