கன்னியாகுமரி

குழந்தைத் திருமணம் செய்து வைத்தால் சிறைஆட்சியா் எச்சரிக்கை

DIN

குழந்தைத் திருமணம்செய்து வைத்தாலோ, குழந்தை திருமணத்துக்கு உதவி புரிந்தாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் செய்யப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது. மேலும், குழந்தைத் திருமணம் செய்யும் மணமகன், திருமணத்தை முன்னின்று நடத்துபவா்கள் அல்லது வழிகாட்டுபவா்கள், அா்ச்சகா், பெண் குழந்தைக்கு பொறுப்பாக உள்ள பெற்றோா் அல்லது பாதுகாவலா், திருமணத்தில் கலந்து கொள்பவா்கள், அனுமதி அளித்தவா்கள் மற்றும் தடுக்கத் தவறியவா்கள் அனைவரும் குற்றவாளி ஆவாா்கள். குற்றம் புரிந்தவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

குழந்தைத் திருமணம் பற்றிய தகவலறிந்தால் 1098 (அல்லது)181 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம். தகவல் அளித்தவரின் விவரம் பாதுகாக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 04652 278404 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT