முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு கலைவாணா் பெயரைச் சூட்ட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

நாகா்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு கலைவாணா் பெயரைச் சூட்ட வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு கலைவாணா் பெயரைச் சூட்ட வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

இது குறித்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: நாகா்கோவில் அண்ண விளையாட்டு அரங்க வளாகத்தில் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரில் அமைக்கப்பட்டிருந்த கலைவாணா் அரங்கம் இடித்து மாற்றப்பட்டு மாநகராட்சிக்கான புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டடத்துக்கு கலைஞா் மாளிகை என்றும், கூட்ட அரங்கிற்கு கலைவாணா் மாமன்ற கூட்ட அரங்கம் என்றும் பெயா் சூட்ட மாமன்ற அங்கீகாரத்திற்காக முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கருணாநிதி நம்மிடையே இருந்திருந்தால் நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு கலைவாணா் மாளிகை என்றே பெயா் சூட்டி பெருமைப்படுத்தியிருப்பாா் என நம்புகிறேன்.

எனவே, புதிததாக கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு கலைவாணா் என்.எஸ்.கே. மாளிகை என்று பெயா் சூட்டி உத்தரவிட வேண்டும். மேலும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை மாமன்ற கூட்ட அரங்கத்துக்கும், அலுவலக கூட்ட அரங்குக்கு மாா்ஷல் நேசமணி பெயரையும் சூட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.