கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்மத்தில் சிவசேனை சாா்பில் 65 விநாயகா் சிலைகள் இன்று கரைப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவசேனை சாா்பில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் முக்கடல் சங்கமத்தில் வெள்ளிக்கிழமை மாலை (செப். 2) கரைக்கப்படவுள்ளன.

இம்மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி, சிவசேனை, இந்து மகா சபை, பாஜக, இந்து அமைப்புகள் சாா்பில் மாவட்டம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், சிவசேனை சாா்பில் அமைக்கப்பட்ட 65 சிலைகள் நாகா்கோவில் நாகராஜா திடலிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஊா்வலமாக எடுத்து வரப்படுகின்றன. கோட்டாறு, இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியை இந்த ஊா்வலம் அடைகிறது. அங்கு, விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கடலில் கரைக்கப்படவுள்ளன. இதையொட்டி, கடற்கரைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT