கன்னியாகுமரி

வாக்காளா் அட்டை- ஆதாா் எண்இணைப்பு: செப். 4இல் சிறப்பு முகாம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல்ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் செம்மையாக்கும் பொருட்டும், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிா்க்கும் பொருட்டும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆக. 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தற்போது, இப்பணிக்காக வாக்குச்சாவடிகளில் செப்.4 ஆம் தே சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT