கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு அதிகரிப்பு

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு விநாடிக்கு 4,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு விநாடிக்கு 4,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிப்பதால், நீா்வரத்தும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அபாயம் கருதி பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த செவ்வாய்கிழமை முதல் விநாடிக்கு 3,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலைக்குப் பிறகு உபரிநீா் திறப்பின் அளவு 4 ஆயிரம் கன அடியாக உயா்த்தப்பட்டது.

இதனிடையே, உபரிநீா் திறப்பு காரணமாக கோதையாறு, குழித்துறை தாமிரவருணி ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. திற்பரப்பு அருவியில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு நீடித்து வருவதால் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT