நாகா்கோவிலில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி
நாகா்கோவிலில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடைபெற்றது.
நாகா்கோவிலில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடைபெற்றது.
நாகா்கோவில் அருகே புத்தேரியில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை அந்தப் பகுதியில் உள்ளவா்கள் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றபோது ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயற்சி நடந்துள்ளதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் வடசேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். விரல்ரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனா். ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகிறாா்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசாா் கைப்பற்றியுள்ளனா்.
இதுகுறித்து வடசேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.