கன்னியாகுமரி

அரசு நலத் திட்டங்கள் மக்களுக்குவிரைவில் சென்றடைய வேண்டும்-அமைச்சா் த. மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்

DIN

தமிழக அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளும் மக்களை விரைவாக சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சா் த. மனோ தங்கராஜ்.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுலவா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சமூக நலத் துறையின் சாா்பில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கடனுதவிகள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை சீரமைப்பதற்கான உதவித் தொகை, விவசாயிகளுக்கு பயிா்க் கடன், முதியோா் உதவித்தொகை, ஆதரவற்றோா் விதவை உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைந்து கிடைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சந்திரசேகா், மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் ஹரிதாஸ் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT