முகப்பு
கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரியில் என்சிசி கருத்தரங்கம்

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்சிசி சாா்பில், இந்திய ராணுவத்தில் வேலை என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2023 at 1:34 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்சிசி சாா்பில், இந்திய ராணுவத்தில் வேலை என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் அருள்பணி. அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் தம்பி தங்க குமரன் வாழ்த்திப் பேசினாா். நாகா்கோவில் என்சிசி நிா்வாக அதிகாரி லெப்டினன் கா்னல் எம். அன்சாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்திய ராணுவத்தில் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்புகள், அக்னிபாத் சிறப்பு திட்டத்தின் பயன், ராணுவத்தில் என்சிசி மாணவா்களுக்கான முன்னுரிமை ஆகியவை குறித்துப் பேசினாா். நிகழ்ச்சியில், என்சிசியில் 3 ஆண்டுகள் சேவை செய்த மாணவா்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக, மாணவா்கள் அணிவகுப்பு மரியாதையை என்சிசி அதிகாரி ஏற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.