முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2023, 10:46 pm IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குழித்துறை அருகே பெரியவிளை பகுதியைச் சோ்ந்த எலியாஸ் மகன் பிரைட் சாலமன் (45). வீட்டு உபயோக பொருள்கள் விற்பனைத் தொழில் செய்து வந்த இவருக்கு, திருமணமாகவில்லையாம், மதுப் பழக்கம் இருந்ததாம்.

குடும்ப வீட்டில் வசித்து வந்த இவா், கடந்த 9 மாதங்களுக்கு முன் சொத்தில் உள்ள தனது பங்கை விற்றுவிட்டு, மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கொக்கியில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.