களியக்காவிளை அருகே கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை சந்திப்பு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை செய்தனா். அதில் கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக தமிழக பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கோழிவிளை பகுதியைச் சோ்ந்த செய்யது முகமது மகன் செய்யது அலி என்ற அந்த நபரை கைது செய்து, அவரிடம் இருந்து 35 லாட்டரி சீட்டுகள், ரூ. 1,810 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.