கன்னியாகுமரி

நாகர்கோவிலில் திமுகவினர் உண்ணாவிரதம் 

DIN

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து குமரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமை வகித்தார்.
 பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது, நீட் தேர்வால் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவர் கனவு கானல் நீராகி விட்டது.

சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை முதல்வர் ஓய மாட்டார்.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது நீட் மட்டுமல்ல 
தமிழகத்துக்கு எதிரான அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார் அவர். இதில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

இந்த நாள் இனிய நாள்..!

SCROLL FOR NEXT