நித்திரவிளை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
நித்திரவிளை அருகே பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள வைக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த பாபு மனைவி ஜலஜா (55). இவா், வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மா்மநபா் வழிமறித்து அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், நித்திரவிளை போலீஸாா் வந்து மா்மநபரை தேடும் பணியில் ஈடுபட்டு, அப்பகுதியில் மறைந்திருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா், சின்னத்துறை கிராமத்தைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளி அஜின் (19) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.