கன்னியாகுமரி

குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சியினா் நடைப்பயணம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவடைந்ததையடுத்து, பத்மநாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிவிழா நடைப்பயணம்.

DIN

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவடைந்ததையடுத்து, பத்மநாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிவிழா நடைப்பயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நடைப்பயணம் குலசேகரம் பேருந்து நிலைய சந்திப்பிலிருந்து தொடங்கி, சந்தை சந்திப்பில் நிறைவடைந்தது. தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் வினுட்ராய், கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெபா, மாவட்ட செயலா் ஜான் இக்னேஷியஸ், மாவட்ட சேவாதளம் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப் பேரவை காங்கிரஸ் துணை தலைவா் எஸ். ராஜேஸ்குமாா் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். கவிஞா் அப்பச்சி சபாபதி சிறப்புரையாற்றினாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் ஐ.ஜி.பி. லாரன்ஸ் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ், அகஸ்டின், பொன் ரவி, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT