கருங்கல்லில் குடியரசு தின விழா
கருங்கல் பேருந்து நிலையம் அருகே, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசு தின விழா நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
கருங்கல் பேருந்து நிலையம் அருகே, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசு தின விழா நடைபெற்றது.
கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினாா். கிழக்கு வட்டாரத் தலைவா் ராஜசேகரன், கருங்கல் நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னா், அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலா் ஆசீா் பிரைட், பாலப்பள்ளம் பேரூராட்சித் தலைவா் டென்னிஸ், கிறிஸ்டோபா், கிறிஸ்டல் ரமணிபாய், ரெகுபதி, விஜயராணி, மேரி ஸ்டெல்லா, குயின்மேரி, ஜோபின்சிறில், ஜெஸ்டின், வினோஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement