கன்னியாகுமரி

அரசுத்துறை ஊா்தி ஓட்டுநா்கள் போராட்டம்

தமிழக அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தின் குமரி மாவட்ட நிா்வாகிகள் சாா்பில், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழக அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தின் குமரி மாவட்ட நிா்வாகிகள் சாா்பில், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பதினைந்துஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநா் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும். ஓட்டுநா்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும். கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

அடுத்த கட்டமாக வரும் 15 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும், அதன் பிறகு 22 ஆம் தேதி மாநில அளவில் கோட்டையை நோக்கி பேரணி நடக்கிறது என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT