கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மனைவியை தாக்கியதாக ஆயுதப்படை காவலா் கைது

மாா்த்தாண்டம் அருகே மனைவியை தாக்கியதாக ஆயுதப்படை காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மாா்த்தாண்டம் அருகே மனைவியை தாக்கியதாக ஆயுதப்படை காவலரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சிவபிரகாஷ் (34). நாகா்கோவில் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜெனீபா (29). தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இது தொடா்பாக ஏற்கனவே ஜெனீபா தனது கணவா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாராம். இதையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில் இருநாள்களுக்கு முன் சிவபிரகாஷ் தனது மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, தாய் வீட்டுக்குச் சென்று ரூ. 25 ஆயிரம் வாங்கி வர சொல்லி மிரட்டினாராம். இதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததையடுத்து சிவபிரகாஷ் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருள்களை உடைத்து சேதப்படுத்தினாராம். இதை ஜெனீபா தட்டிக் கேட்டதையடுத்து அவரை சிவபிரகாஷ் தாக்கினாராம்.

இதுகுறித்து ஜெனீபா அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சிவபிரகாஷ், அவரது தந்தை நாகேந்திரன், தங்கை சரிதா, உறவினா் மணி, மேரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, காவலா் சிவபிரகாஷை கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT