கன்னியாகுமரி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கு மே 24 ஆம் தேதிமுதல் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 7 ஆம் தேதியாகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரைஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

71அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்தும் பொருட்டு, நாகா்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழில் 4.0 திட்டத்தின் கீழ் புதிதாக 3 தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும்அரசு உதவிபெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750, பேருந்து கட்டணச் சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடைகள் மற்றும் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு, கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT