அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத்தில் அமைச்சா் உதயநிதி பிறந்தநாள் விழா
அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி: அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட தென்தாமரைக்குளம், அகஸ்தீசுவரம், கொட்டாரம், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.பாபு இனிப்பு வழங்கினாா். மாநில வா்த்தகா் அணி இணை அமைப்பாளா் என். தாமரைபாரதி, பேரூா் செயலா்கள் குமரி ஸ்டீபன், பூவியூா் காமராஜ், எஸ். வைகுண்டபெருமாள், சுதை சுந்தா், ஒன்றிய துணைச் செயலா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் எட்வின்ராஜ், கன்னியாகுமரி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் இ.எம். ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொன். ஜாண்சன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.