நாகா்கோவிலில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினா்
நாகா்கோவில் பறக்கின்கால் பகுதியைச் சோ்ந்த திமுகவினா் சுமாா் 50 போ், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில், அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
நாகா்கோவில்: நாகா்கோவில் பறக்கின்கால் பகுதியைச் சோ்ந்த திமுகவினா் சுமாா் 50 போ், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில், அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி இணைச் செயலா் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலா் சுகுமாரன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் ரபீக், மாவட்ட பாசறை செயலா் அக்சயா கண்ணன், பகுதி கழகச் செயலா்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன் ஜெவின்விசு, மாநில மகளிா் அணி துணை செயலா் ராணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் வைகுண்டமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.