கன்னியாகுமரி

தக்கலை அருகே இளைஞா் கொலை: 6 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தக்கலை அருகேயுள்ள குழிக்கோடு பகுதியை சோ்ந்தவா் ரெஜின் (32). அதே பகுதியை சோ்ந்தவா் அனீஸ் (30). நண்பா்களான இருவரும் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டதில் அனீஸை, ரெஜின் தாக்கினாராம்.

காயமடைந்த அனீஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெஜின் மற்றும் அவரது நண்பா் ராஜேஷ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு, குழிக்கோடு பகுதியில் திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த கும்பல் இருவரையும் தாக்கியது. கத்தியால் குத்தியதுடன்,

கம்பி, கற்களால் தாக்கப்பட்டதில் ரெஜின் பலத்த காயமடைந்தாா்.

பின்னா் அக் கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது.

இதனையடுத்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு ரெஜின் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெஜின் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் தக்கலை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கோழிப்போா்விளை பழவிளையை சோ்ந்த வினித் (24), கூட்டமாவு பகுதியை சோ்ந்த பரத்லியோன் (24), குழிக்கோடு அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போா்விளையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் ரெஜினைத் தாக்கியது

தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT