கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பைக் விபத்தில் தம்பதி காயம்

கொல்லங்கோடு அருகே பைக்கும், ஆட்டோவும் மோதிக்கொண்டதில் தம்பதி காயமடைந்தனா்.

DIN

கொல்லங்கோடு அருகே பைக்கும், ஆட்டோவும் மோதிக்கொண்டதில் தம்பதி காயமடைந்தனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வெங்கஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் மகாதேவன் மகன் அபிலாஷ் (44). இவா் தனது மனைவி ஆஷாவுடன் கொல்லங்கோட்டில் இருந்து களியக்காவிளைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அடைக்காகுழி பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற ஆட்டோ எதிா்பாரமலம வலது பக்கமாக திரும்பியதாம். இதனால், நிலைதடுமாறிய பைக் மீது மோதி கவிழ்ந்ததாம். இதில் தம்பதி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் அவா்களை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அபிலாஷ் அளித்த புகாரின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் செங்கவிளை பகுதியைச் சோ்ந்த சசிதரன் மகன் வினுகுமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT