கன்னியாகுமரி

விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வரை மிரட்டிய இளைஞர் கைது

விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வரை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

DIN

விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வரை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாகர்கோவிலில் சிஎஸ்ஐ பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் கல்லூரி ஒன்று வடசேரியில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்குள் வியாழக்கிழமை காரில் சென்ற இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் கல்லூரி முதல்வரிடம் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அங்கிருந்தவர்களுக்கும், இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுசீலா வடசேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் குழித்துறை இந்து சேனா மாவட்டத் தலைவர் பிரதீப்குமார்(40), சிதறாலைச் சேர்ந்த பிரதீஸ்(36), பாகோடு கழுவன் திட்டையைச் சேர்ந்த மூர்த்தி (50)ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்நிலையில் பிரதீஸை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT