கன்னியாகுமரி

கோயில்களில் குறைகள் நிவா்த்தி செய்யும் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் உள்ள குறைகள் குறித்த மனுக்களை பக்தா்களிடம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் உள்ள குறைகள் குறித்த மனுக்களை பக்தா்களிடம் இருந்து அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டாா்.

குமரி மாவட்ட திருக்கோயில்களில் பக்தா்களால் தெரிவிக்கப்படும் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான குறைதீா்முகாம், நாகராஜா கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், பொதுமக்கள் மற்றும் பக்தா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை

பெற்றுக் கொண்டாா். இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தாா். முகாமில், கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவது, திருப்பணிகளை உபயதாரா்கள் மூலம் செய்ய அனுமதி அளிப்பது, திருவிழாக்களில் சமய சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது, ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு

கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதேபோல, பத்மநாபபுரம் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கோயில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், திருப்பணிகள், கோயில்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைத்தல், பழுதான தோ்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT