கருங்கல் அருகே ரூ. 1.18 லட்சம் பறிமுதல்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:34 PM
கருங்கல் அருகே உள்ள சடையன் குழி பகுதியில் தோ்தல் படக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிள்ளியூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுனில் குமாா் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த எண்ணெய் வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகரிடம் ஒப்படைத்தனா்.