முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:38 PM
பகிர்:

கருங்கல், ஏப். 12: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடைவெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை,வெள்ளியாவிளை,பாலூா்,எட்டணி,திப்பிரமலை,மிடாலம்,கிள்ளியூா்,முள்ளங்கனாவிளை,நட்டாலம்,நேசா்புரம்,பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10மணி அளவில் மிதமான மழை பெய்தது.இந்த மழை சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. இதனால், அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்,

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments