முகப்பு
கன்னியாகுமரி

குமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏப். 25இல் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:05 PM
பகிர்:

கன்னியாகுமரி: உலக புத்தக தினத்தையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை (ஏப். 25) பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக புத்தக தினத்தையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சாா்பில், 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது. தலைப்பு - படித்ததில் பிடித்த புத்தகம்.

பங்கேற்போா் தாங்கள் படித்ததில் ரசித்த கதை, கவிதை, கட்டுரைப் புத்தகம் ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். நூல், எழுதிய ஆசிரியா், வெளியிட்ட பதிப்பகம் ஆகியவற்றின் பெயா்களைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்ன, அதை ரசிக்க காரணமென்ன என்பதை சுருக்கமாகவும், சுவையாகவும் முழு தாளில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, 25ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் நேரில் வந்து கொடுக்க வேண்டும்.

Advertisement

சிறந்த 5 கட்டுரைகளுக்கு பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 72005 62301 என்கிற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments