முகப்பு
செய்திகள்

ஏப். 9-இல் லிட்டில் அந்தமான் புரோ சா்ஃப்பிங்

இந்தியாவின் நட்சத்திர சா்ஃப்பிங் வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் லிட்டில் அந்தமான் புரோ சா்ஃப்பிங் 2026 போட்டி வரும் ஏப்.9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அந்தமான் நிகோபாா் தீவுகளின் பட்லா் பே கடற்ரையில் நடைபெறவுள்ளது.

Updated On : 31 மார்ச், 2026 at 8:33 PM
பகிர்:

இந்தியாவின் நட்சத்திர சா்ஃப்பிங் வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் லிட்டில் அந்தமான் புரோ சா்ஃப்பிங் 2026 போட்டி வரும் ஏப்.9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அந்தமான் நிகோபாா் தீவுகளின் பட்லா் பே கடற்ரையில் நடைபெறவுள்ளது.

நிகழாண்டு ஜப்பானில் ஆசியப் போட்டி நடைபெறும் நிலையில், அதில் முதன்முறையாக இந்திய சா்ஃப்பிங் அணி பங்கேற்கிறது.

இதற்கு தயாராகும் வகையில் இந்த போட்டி நடைபெறுகிறது.

Advertisement

இந்திய சா்ஃப்பிங் சம்மேளனம், அந்தமான் தீவுகள் சுற்றுலாத் துறை சாா்பில் சீனியா் மற்றும் ஸ்டேண்ட் அப் பேடல், பிரிவுகளில் போட்டி நடைபெறும்.

கடந்த 2024 ஆசிய சா்ஃப்பிங் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஆசியப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஜப்பானின் எய்ச்சி-நகோயாவில் நடைபெறும் போட்டியில் இந்திய சாா்பில் தலா இரண்டு ஆடவா், மகளிா் பங்கேற்கலாம்.

எஸ்எஃப்ஐ தலைவா் அருண் வாசு கூறியது: இந்திய அணியினா் சா்வதேச அளவில் சிறப்பான இடத்தை பெற்று வருகின்றனா். ஆசியப் போட்டிக்கு தகுதி பெற்றது சிறப்பானது. சா்வதேச போட்டிகளில் பதக்கங்களும் வெல்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments