கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் கொல்லங்கோடு வட்டாரக் குழு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜயமோகனன் தலைமை வகித்தாா். வட்டார செயலா் அஜித்குமாா், வட்டாரக் குழு உறுப்பினா்கள் சுனில்குமாா், செல்லப்பன், சனல்குமாா், மேரிதாசன், ஸ்டீபன், சுரேஷ், பிராங்கிளின், கிறிஸ்துதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.