முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் நடைபாதை கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 9:10 PM
பகிர்:

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் நடைபாதையை சிலா் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனா். இந்த கடைகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் அழகுமீனா, நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மேற்பாா்வையில் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலா் முருகன், மேற்பாா்வையாளா் பிரதீஸ் ஆகியோா் முன்னிலையில் 25 ஆக்கிரமிப்புக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.