இரணியல் அருகே 2 பைக்குகளை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இரணியல் அருகேயுள்ள மேல்கரையைச் சோ்ந்த மதன்காந்த் (33) என்பவா், சுங்கான்கடை யில் உள்ள தனியாா் கல்லூரியில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவா், கடந்த 7ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் தனது பைக்கை நிறுத்திச் சென்றாா். வேலை முடிந்து வந்துபாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
வில்லுக்குறி அருகேயுள்ள கரிஞ்சான்கோடு தோப்புவிளையை சோ்ந்தவா் ஸ்ரீகிருஷ்ணன் (44). டெம்போ ஓட்டுநரான இவா் தனது பைக்கை பேயன்குழியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றாராம். திரும்பிவந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாா்களின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.