முகப்பு
கன்னியாகுமரி

பெத்தேல்புரத்தில் ஏடிஎம் மூடல்: வாடிக்கையாளா்கள் அவதி

கருங்கல் அருகே பெத்தேல்புரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் திடீரென செயல்படாததால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 7:14 PM
பகிர்:

கருங்கல் அருகே பெத்தேல்புரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் திடீரென செயல்படாததால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இப்பகுதியில் வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் இல்லாத நிலையில், இந்த ஒரு ஏடிஎம் மையம் மட்டுமே பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்ததால் சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளா்கள் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள குளச்சல், திக்கணம்கோடு, கருங்கல், திங்கள்நகா் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Advertisement

எனவே, இந்த ஏடிஎம் மையத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments