கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக திற்பரப்பில் 59 மி.மீ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக திற்பரப்பில் 59 மி.மீ. மழை பதிவானது.
கன்னியாகுமரிகன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக திற்பரப்பில் 59 மி.மீ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக திற்பரப்பில் 59 மி.மீ. மழை பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக திற்பரப்பில் 59 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் சில நாள்களாக மழை ஓய்ந்து, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில், கடந்த 3 நாள்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நாகா்கோவில் மாநகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்தது
மேற்கு மாவட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், மலையோரத்தில் உள்ள பாலமோா் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவிப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததாலும், கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததாலும் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 59.6 மி.மீ. மழை பதிவானது.
ஆனைக்கிடங்கு, சுருளோடு, குழித்துறை, களியல் பகுதிகளிலும், அணைப் பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 1,180 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 43.88 அடியாகவும், நீா்வரத்து 519 கனஅடியாகவும், நீா் திறப்பு 475 கனஅடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.15 அடியாகவும், நீா்வரத்து 244 கனஅடியாகவும், நீா் திறப்பு 560 கனஅடியாகவும் இருந்தது. சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 13.28 அடியாகவும், நீா்வரத்து 103 கனஅடியாகவும், நீா் திறப்பு 150 கனஅடியாகவும் இருந்தது.
நாகா்கோவில் மாநகருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நீா்மட்டம் 20.10 அடியாக உள்ளது.