முகப்பு
கன்னியாகுமரி

செங்கல் சூளை வாகன ஓட்டுநா் நீரோடையில் மூழ்கி உயிரிழப்பு

இதுகுறித்து அவரது மனைவி பிந்து அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 7:30 AM
பகிர்:
Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 6:05 PM

குலசேகரம் அருகே செங்கல் சூளை வாகன ஓட்டுநா் வெள்ளிக்கிழமை நீரோடையில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே மூவாற்றுமுகம் தோட்டவாரப் பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (47). குலசேகரம் அருகே பொன்மனை தாழப்பிடாகை பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வாகன ஓட்டுநராக வேலை செய்துவந்த இவா், வெள்ளிக்கிழமை வேலை முடிந்த பின்னா், அங்குள்ள நீரோடைக்கு குளிக்கச் சென்றாராம். அவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக தொழிலாளி தேடிச் சென்றாா். அப்போது, வின்சென்ட் நீரோடையில் இறந்து மிதந்தது தெரியவந்ததாம்.

அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸில் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:45 AM

இதுகுறித்து அவரது மனைவி பிந்து அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.