நாகா்கோவில் வட்டவிளை பகுதியில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் விஜயகுமாரின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மேயா் ரெ. மகேஷ் கடையைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
துணை மேயா் மேரிபிரின்ஸி லதா, மாநகராட்சி நகா் நல அலுவலா் ராம்குமாா், மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாநகராட்சி உறுப்பினா் அனிலா சுகுமாரன், ஊா் தலைவா் முருகன், செயலா் சேகா், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் சுகுமாரன், திமுக பகுதிச் செயலா் துரை, நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் ராஜன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் அகஸ்தீசன், அதிகாரிகள் பங்கேற்றனா்.