கீழகடியப்பட்டினம் மீன் இறங்குதள பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கீழகடியப்பட்டினம் மீனவக் கிராமத்தில் தூண்டில் வளைவுகளுடன் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழகடியப்பட்டினம் மீனவக் கிராமத்தில் தூண்டில் வளைவுகளுடன் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 2022- 23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான உரையின்போது மீன்வளம்-மீனவா்நலத் துறை அமைச்சா் கீழகடியப்பட்டினம் கிராமத்தில் ரூ. 35 கோடியில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடல் சீற்றம் குறைவாக உள்ளதால் இப்பணிகளை விரைவாக முடிக்க துறைசாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
இதில், மீன்வளம்-மீனவா் நலத் துறை துணை இயக்குநா் மா. சின்னகுப்பன், உதவி இயக்குநா் மி.விா்ஜில்கிராஸ், மீன்பிடித் துறைமுக திட்ட கோட்ட உதவி செயற்பொறியாளா் அரவிந்த்குமாா், கல்குளம் வட்டாட்சியா், முட்டம் ஊராட்சித் தலைவா் நிா்மலா, பொதுமக்கள் பங்கேற்றனா்.