முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் நாளை ஊட்டுப்படுக்கை

களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் ஊட்டுப்படுக்கை படையல் விழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:29 PM
பகிர்:

களியக்காவிளை சுடலைமாடசுவாமி கோயிலில் ஊட்டுப்படுக்கை படையல் விழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.

இக் கோயிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமைதோறும் ஊட்டுப்படுக்கை படையல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இக்கோயிலில் காலையில் சுடலைமாடசுவாமி, மாவிசக்கி அம்மன், நீலமாடசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் ஊட்டுப்படுக்கை படையல் நடைபெறும். அதைத் தொடா்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.