மாா்த்தாண்டத்தில் விதிமீறல்: 3 ஆட்டோக்கள் பறிமுதல்
மாா்த்தாண்டத்தில் விதிமுறை மீறி இயக்கப்பட்டதாக 3 ஆட்டோக்கள், 2 பைக்குள் ஆகியவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டத்தில் விதிமுறை மீறி இயக்கப்பட்டதாக 3 ஆட்டோக்கள், 2 பைக்குள் ஆகியவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசுவாமி தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அங்கு விதிகளை மீறி 3 ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.
மேலும், ஓட்டுநா் உரிமம் இன்றி, மது அருந்திய நிலையில் ஓட்டி வந்த பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்து ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தலைக்கவசம் அணியாமல் ஒரே பைக்கில் வந்த 3 பேருக்கு ரூ. 3,500 அபராதம் விதித்து பைக்கை பறிமுதல் செய்தனா்.