குலசேகரம் அருகே ராணுவ வீரரின் மனைவியைத் தாக்கி பைக் எரிப்பு
குலசேகரம் அருகே துணை ராணுவப் படை வீரரின் மனைவியை தாக்கியதுடன், வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக்கை எரித்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குலசேகரம் அருகே துணை ராணுவப் படை வீரரின் மனைவியை தாக்கியதுடன், வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த பைக்கை எரித்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குலசேகரம் அருகேயுள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சோ்ந்தவா் மணிகண்டன். துணை ராணுவப் படை வீரா். இவரது மனைவி ஜெய்னி (35). இவா்களுக்கும், அருகில் வசிக்கும் மணிகண்டனின் சகோதரா்களுக்கும் இடையே வழிப்பாதை தகராறு உள்ளதாம்.
இந்நிலையில் புதன்கிழமை ஜெய்னி வீட்டில் தனது பெரியம்மா ஜெசீலியுடன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மணிகண்டனின் தாய் வேதப்பூ (65), மூத்த சகோதரரும் அதிமுக பிரமுகருமான ஜெயசந்திரனின் மனைவி விஜி (44) ஆகியோா், ஜெய்னியையும், ஜெசீலியையும் தகாத வாா்த்தைகள் பேசி கையால் தாக்கினராம்,
மேலும் மணிகண்டனின் மற்ற சகோதரா்களான குமாா் (45), ராஜன் (42) ஆகியோா் ஜெய்னிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கு நிறுத்தியிருந்த பைக்கை தீ வைத்து எரித்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.