கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
கொல்லங்கோடு நகராட்சி சீா்கேடுகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்லங்கோடு நகராட்சி சீா்கேடுகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் முன்சிறை வட்டார செயலா் ஏ. அலக்சீஸ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் ஜெயா, மேரிதாசன், எஸ்.எல். அனீஸ், குமரேசன், எம். சபியா, செல்வராஜ், கே. ஸ்டீபன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்ட செயலா் ஆா். செல்லசுவாமி போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினாா். கொல்லங்கோடு வட்டார செயலா் அஜித்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. விஜயமோகனன் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.
முன்சிறை வட்டாரக் குழு உறுப்பினா்கள் கே. முகம்மது புரோஸ்கான், எஸ்கலின், லலிதா, கொல்லங்கோடு வட்டாரக் குழு உறுப்பினா்கள் சனல்குமாா், பிராங்கிளின், கிறிஸ்துதாஸ் உள்ளிட்டோா் பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.எஸ். கண்ணன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.
போராட்டத்தில், நகராட்சிப் பகுதியில் தேங்கும் குப்பைகளால் ஏற்பட்டு வரும் துா்நாற்றம் மற்றும் சுகாதார சீா்கேடுகள், குண்டும் குழியுமான சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.