முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் முகாம்

நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா் ரெ.மகேஷ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 11:09 PM
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மேயா் ரெ.மகேஷ். உடன் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா.
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா் ரெ.மகேஷ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து சொத்து வரி உயா்வு, தெரு விளக்கு, குடிநீா், உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாந 12 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசித்தாா். கூட்டத்தில் நகரமைப்பு அலுவலா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.