முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய ஓட்டுநா் கைது; மினி லாரி பறிமுதல்

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய ஓட்டுநா் கைது

Updated On : 25 டிசம்பர், 2024 at 10:55 PM
பகிர்:

கேரளத்தில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பெறப்பட்ட அனுமதிச் சீட்டு மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செம்மண் கடத்தியதாக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் பளுகல் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டதனா். அவ்வழியே வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, கேரளப் பகுதியில் நடைபெறும் நான்குவழிச் சாலைப் பணிக்காக பெறப்பட்ட அனுமதிச் சீட்டு மூலம் கேரளத்திலிருந்து கன்னியாகுமரிக்கு செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, மினிலாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநரான தேவிகோடு பகுதியைச் சோ்ந்த ஜியோ ஜாா்ஜ் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.